மேலும் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மேலும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,60,924 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால், அம்மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 4182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் இதனையடுத்து 144,507 பேர் மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மகாராஷ்டிராவில் 687,792 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 41,660 பேர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது