இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை பாம்பு கொத்தவிட்டு கொன்ற கணவன்!
புதன், 15 ஜூலை 2020 (15:12 IST)
மனைவியை நான் தான் பாம்பு வைத்து கொன்றேன் என ஒப்புக்கொண்டுள்ளார் சுராஜ்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சுராஜின் மனைவி கடந்த மே மாதம் பாம்பு கடித்து உழிரிழந்தார். ஆனால் இவரது மரணத்தில் அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சுராஜ் மூர்க்கன் வகை பாம்பை ரூ.10,000 கொடுத்து வாங்கி மனைவியை கொன்றது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் போலீஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இது அப்பகுதியிலும் குடும்பத்தார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.