கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்..? பன்றிகளை கொல்ல முடிவு!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (13:40 IST)
கேரளாவில் பண்ணைகளில் வளர்க்கும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் எட்டுமுனை பகுதியில் உள்ள பன்றி பண்ணை ஒன்றில் கடந்த சில நாட்கள் முன்னதாக பன்றிகள் கொத்தாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபால் வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ALSO READ: உக்ரைனுக்கு போர் பயிற்சி அளிக்கின்றதா ஆஸ்திரேலியா? அதிர்ச்சியில் ரஷ்யா

அந்த ஆய்வில் இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியில் 10 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளையும் ஆய்வு செய்ய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் பன்றி பண்ணைகளில் பணி புரிந்தவர்களின் ரத்த மாதிரி உள்ளிட்டவையும் சோதிக்கப்படுகின்றன.

நோய் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள பன்றிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்