பேட்டி எடுக்க ஊடகங்கள் பயன்படுத்தும் மைக் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் பேட்டி எடுக்க கேரள அரசு தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிலிருந்து மீண்டவர்களை ஊடகங்கள் பேட்டியெடுப்பது போன்ற செயல்களால் மைக் மூலமாக கொரோனா பரவிட வாய்ப்பிருப்பதாக கருதிய கேரள அரசு கொரோனா பாதித்தவர்களை பேட்டியெடுக்க தடை விதித்துள்ளது.
மலேசியாவில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.