உலக தலைவர்களையும் விட்டுவைக்காத கொரோனா!

ஞாயிறு, 15 மார்ச் 2020 (08:55 IST)
உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பலிக் கொண்டுள்ள கொரோனா உலக தலைவர்களையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்ட இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ்கள் பரவும்போது சாதாரண மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.

ஆனால் கொரோனா தொற்று அப்படியில்லாமல் உலக தலைவர்கள் முதற்கொண்டு அனைவரையும் தாக்கி வருகிறது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர், ஈரான் அமைச்சர், ஸ்பெயின் சமத்துவ அமைச்சர் ஆகியோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அமைச்சருடன் சந்திப்பு நிகழ்த்தியதால் ட்ரம்ப் மகள் இவான்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்