டாக்டர் ஒகே சொன்னாதான் மது தருவோம்! – கேரள முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (10:31 IST)
கேரளாவில் மதுக்கடைகளை மூடியதால் பலர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் மது விநியோகம் செய்ய புதிய நடைமுறையை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஊரடங்கு காரணமாக அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் பலர் தற்கொலை செய்து கொள்வதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதன்படி, மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிசீலனைகளுக்கு பிறகு அவர்களுக்கு மது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடப்படும்போதே சிலர் ஆன்லைனில் மது வாங்க வசதி செய்யுமாறு கேட்டு வந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் ஆன்லைன் மூலம் மது வாங்கும் வசதியை ஏற்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்