கொரோனா வைரஸ்: அவசர நிலையை அறிவித்த முதல்வர்

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (21:52 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
 
சற்று முன்னர் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேரளாவில் அவசரநிலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிக அளவில் கொரோனா  வைரஸ் பாதிப்பு நோயாளிகள் இருப்பதால் அங்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்