கேதார்நாத் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், ரூ. 4,000 கோடி செலவில் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறிய போது, "பர்வத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ரோப் கார் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான மொத்த செலவு ₹6,800 கோடிக்கு மேல் இருக்கும். முதற்கட்டமாக, ₹4,000 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
தற்போது, இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ஆனால், ரோப் கார் அமைக்கப்பட்டால் வெறும் 36 நிமிடங்களில் பயணம் முடிக்கலாம்.