டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (13:22 IST)
நெல்லை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவின் நீதிமன்ற காவல் ஜூன் மூன்றாம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
 
 இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில் கவிதாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதும் அவரது நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது காவலை ஜூலை மூன்றாம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்