சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மே 20 வரை காவல் நீட்டிப்பு..!

Senthil Velan

புதன், 15 மே 2024 (08:36 IST)
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மாநில மேலவை உறுப்பினரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், அமலாக்கத்துறை அதிகாரிகள், காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை நடைபெற்று வருவதால், கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிபதியை கேட்டுக்கொண்டனர். 

ALSO READ: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா..? அட நம்பவே முடியல..!!
 
மேலும், இவ்வழக்கு தொடர்பாக 8000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை குறித்து வரும் 20-ம் தேதி தெரிவிப்பதாகவும், அது வரை கவிதாவுக்கு நீதிமன்ற காவலை நீட்டிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்