மூன்றாக பிரிகிறதா காஷ்மீர்?? மத்திய அரசின் முடிவு என்ன??

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (16:04 IST)
காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவலை மத்திய அரசும் காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக் மற்றும் காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்