எந்த பொண்ணை கட்டலாம்? டாஸ் போட்டு முடிவு! – கர்நாடகாவில் பலே சம்பவம்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:59 IST)
கர்நாடகாவில் இரண்டு பெண்களை காதலித்த நபர் யாரை திருமணம் செய்வது என டாஸ் போட்டு முடிவு எடுக்கப்பட்டது வைரலாகியுள்ளது.

கர்நாடகாவின் சக்லேஷ்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். தங்கள் காதலன் மற்றொரு பெண்ணையும் காதலிப்பது தெரியாமல் இரு பெண்களும் இளைஞரை காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் இந்த விஷயம் இரு பெண்களுக்கும் தெரிய வர இளைஞர் தனக்குதான் சொந்தம் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. பஞ்சாயத்தில் இரண்டு பெண்களையுமே இளைஞருக்கு பிடித்திருப்பதாக கூறியதால் டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பதாக முடிவானது.

அதன்படி டாஸ் போட்டு ஒரு பெண்ணை தேர்வு செய்து இளைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மற்றொரு பெண் இளைஞரை அறைந்து விட்டு அங்கிருந்து சென்றாராம். இந்த சம்பவம் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்