நடிகரின் பிறந்தநாளில் எருமை பலி கொடுத்த ரசிகர்கள்! – பாய்ந்தது வழக்கு!

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:55 IST)
கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் சிலர் எருமை மாட்டை பலிகொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் சுதீப்பின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அவரது ரசிகர்கள் பலர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாடி மாவட்டத்தில் சுதீப்பின் ரசிகர்கள் சிலர் அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்