வேஷ்டி அணிந்ததால் விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை ஒருவாரம் மூட உத்தரவு

Mahendran

வியாழன், 18 ஜூலை 2024 (15:53 IST)
பெங்களூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேஷ்டி அணிந்த விவசாயி ஒருவரை காவலாளி உள்ளே விட மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திநிலையில் அந்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பெங்களூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விவசாயி மற்றும் அவருடைய மகன் திரைப்படம் பார்க்க சென்றனர். அதற்கான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயி வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த நிலையில் வேட்டி அணிந்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக தெரிகிறது.
 
இது குறித்த புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வணிக வளாகம் முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
ந்த நிலையில் வணிக வளாகத்தின் பாதுகாப்புத்துறை நிர்வாகி விவசாயி இடம் மன்னிப்பு கேட்ட நிலையில் கர்நாடகா அரசு தற்போது அதிரடியாக வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த உத்தரவை நகர வளர்ச்சி துறை அமைச்சர் சுரேஷ் பிறப்பித்த நிலையில் இது குறித்து மேலும் விசாரணை செய்யப்படும் என்றும் விவசாயியை அனுமதிக்காத பாதுகாப்பு காவலாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்