இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு! தமிழ்நாடு அரசு பெருமிதம்!

Mahendran

புதன், 17 ஜூலை 2024 (20:12 IST)
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு என தமிழ்நாடு அரசு பெருமிதம் கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் மக்கள் கோரிக்கையை ஏற்று ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ! 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
முதியோர் உதவித் தொகை ரூ.1,000 என்பது ரூ.1,2001 மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ.1,000 என்பது ரூ.1,500! முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.5,337 கோடி, மிக்ஜம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ரூ.2476.89கோடி,  முதலிய பல்வேறு பணிகளை ஆற்றி
இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு !
 
வருவாய்த் துறை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை. இந்தத் துறை ஒரு காலத்தில் நில வரி வசூல் செய்கின்ற பணியை மட்டுமே செய்து வந்தது. இந்தத் துறை தற்போது பொது நிர்வாகத் துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாகச் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பேரிடரின்போது பொது மக்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்குதல், அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தல், அரசு நிலங்களைப் பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலச் சீர்திருத்தச் சட்டங்களை செயல்படுத்துதல், அரசு நிலத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குதல், பட்டா மாறுதல் செய்கின்ற நிலத்தின் எல்லைகளை அளந்து காட்டுதல் இதுபோன்ற செயல்களை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற பணிகளையும், பொதுத் தேர்தல் நடத்துகின்ற பணிகளையும் வருவாய்த் துறை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்