தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்து முடிவு எடுக்கவும் மனுவில் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் பற்றாக்குறை இருப்பதாலும், போராட்டங்கள் நடப்பதாலும் உத்தரவை நிறைவேற்ற முடியாத சூழலில் உள்ளதாக கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.