கர்நாடகா தேர்தல்; பிரச்சாரம் இன்று நிறைவு! – சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (09:15 IST)
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைவதால் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியோடு பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என பலரும், காங்கிரஸில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கர்நாடகாவின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளதால் கர்நாடகா முழுவதும் பிரச்சார வாகனங்கள் பல பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில் கர்நாடகாவில் ஓட்டுரிமை உள்ள அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களை தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்