ஆண்கள் பலாத்காரம் செய்தால், சண்டையிடாமல் சரணடையுங்கள்: டிஜிபி சர்ச்சை பேச்சு...

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (11:05 IST)
சமுதாயத்தில் சாதனை படைத்த பெண்களை கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கு விருது வழங்கும் விழா பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இந்த விழாவில் அம்மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி சங்கிலியானா கலந்துக்கொண்டார். விழாவில் டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர், பரப்பன அக்ரஹார சிறையின் அதிகாரியாக இருந்த ரூபாவிற்கும் விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர், முன்னாள் டிஜிபி சங்கிலியானா பேசினார். அவர் பேசியதாவது...
 
ஆஷா தேவியின் உடலைமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்போது அவரது மகள் நிர்பயா எப்படி இருந்து இருப்பார்? அதேபோல் பெண்கள் பலம் உள்ள ஆண்கள் பலாத்காரம் செய்யும் போது சண்டையிடாமல் சரணடைய வேண்டும்.
 
ஆண்களீடம் சரணடைவதால் உயிர் இழப்பை தவிர்க்கலாம். அதன் பின்னர், மீதியை நீதிமனறத்தில் பார்த்துக்கொள்ளலாம் என சர்சைகுரிய வகையில் பேசியுள்ளார். இவரதி பேச்சு தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்