ராஜினாமாவிற்கு தயாரான குமாரசாமி? ஆளுநரை சந்திக்க முடிவு

திங்கள், 22 ஜூலை 2019 (18:46 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு 16 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில் குமாரசாமி ஆட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்சியை இனி தொடர முடியாது என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினர். 
 
இதனைத்தொடர்ந்து கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் சட்டசபையை கூட்டினர். ஆனால் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் சட்டசபையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கெடுப்பு தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது. 
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை இருப்பதால் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவர் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க அவகாசமும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளுக்கு 99 எம்எல்ஏக்களே உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்