பாஜக பிடியில் எம்எல்ஏக்கள்: கெஞ்சி பிரயோஜனம் இல்லை; மிஞ்சிய சித்தரமையா!

புதன், 10 ஜூலை 2019 (09:41 IST)
கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சித்தரமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு கட்சிகளையும் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 
இந்த ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எம்.எல்.ஏ-க்கள் பாஜகவின் பாதுகாப்புடன் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். இந்த எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் மற்றும் மஜத-வை சேர்ந்த எவரையும் சமரசம் பேச சந்திக்க விருப்பமில்லை எனவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸாரிடம் கேட்டுள்ளனர். 
இந்நிலையில் சித்தராமையா எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், சமரசத்திற்கு உடன்படாவிட்டால், கட்சி தாவல் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். மேலும் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். 6 ஆண்டுகள் அவர்கள் எம்எல்ஏ பதவியில் போட்டியிட முடியாத நிலையையும் உருவாகும் என எச்சரித்துள்ளார். 
 
சித்தராமையாவின் இந்த எச்சரிக்கைக்கு ராஜினாமா கடிதம் வழங்கிய எம்.எல்.ஏ-க்கள் பணிவார்களா அல்லது கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழுமா என்பது பரபரப்பான அரசியல் சூழ்நிலையை அங்கு உருவாக்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்