கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் யார் யார்?

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (08:30 IST)
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக எடியூரப்பா மட்டுமே சமீபத்தில் பதவி ஏற்ற நிலையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் அமைச்சர்கள் பின்னர் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கர்நாடகாவில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் செய்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து முதல் கட்டமாக இன்று 14 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும், ஒரு சில நாட்கள் அழித்து மீண்டும் சில அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கர்நாடக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோகா, ஸ்ரீராமுலு மற்றும் சுனில்குமார், அங்காரா, ரவிக்குமார் போன்றவர்கள் இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை பதவி ஏற்ற பின் யார் யாருக்கு எந்த இலாகா என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்