கர்நாடக தேர்தல் முடிவு: தபால் ஓட்டுக்களில் காங்கிரஸ் முன்னிலை

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (08:15 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணப்பட்டன. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்த தபால் ஓட்டுக்களின் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி தபால் வாக்குகளின்படி, காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. ஆனால் தபால் வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
மேலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட்டு வருவதாகவும், மொத்தம் 84,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்