பிரதமர் மோடி கங்கா விலாஸ் என்ற உலகின் மிக நீளமான ஆற்றுச் சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார். அந்தக் கப்பல் தரை தட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மா நிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து ஆரம்பித்து 51 நாட்கள் பயணித்து, அசாம் வழி வங்கதேசத்திற்குச் செல்லவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த கப்பலில் 3 தளங்களும், 18 அறைகளும் கொண்டுள்ளதாகவும், இதில், 36 பேர் பயணிக்க முடியும் ; இவ்ர்களுடன் 40 பணியாட்கள் தங்கும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போத கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் தரை தட்டியது.
உடனே அக்கப்பலில் இருந்த பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அனைவரும் சிராந்தி சரண் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தக் கப்பல் வங்கதேசம் வழியாக அசாமிலுள்ள திப்ருகர் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.