”ஜெய்ஸ்ரீ ராம்” பக்தர்களுக்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (14:05 IST)
மணிரத்னம் முதலான 49 பிரபலங்கள் இந்து மத வன்முறையாளர்களை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதை கண்டித்தும், “ஜெய்ஸ்ரீ ராம்” பக்தர்களை ஆதரித்தும் பிரபல நடிகை உட்பட 61 பேர் பிரதமருக்கு பதிலடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்திய அளவில் தலித், இஸ்லாம் மற்றும் சிறுபாண்மையின மக்களை மதத்தின் பெயராலும், ராமரின் பெயராலும் துன்புறுத்துவதை கண்டித்தும், அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் ஒரு கடிதத்தை மணிரத்னம், அனுராக் காஷ்யப், ரேவதி, ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 கலைஞர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.

இதை கண்டித்து, ஜெய்ஸ்ரீ ராம் பக்தர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. ஒருசிலரின் செய்கைக்காக மொத்தமாக ஒரு மதத்தையும், அதன் பக்தர்களையும் குற்றப்படுத்துவது நியாயமாகாது என குறிப்பிட்டு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எழுத்தாளர் பிரசூன் ஜோஷி உள்ளிட்ட 61 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

இதனால் ஜெய்ஸ்ரீ ராம் முழக்கத்தால் பிரபலங்களுக்கிடையே பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் ஏற்படுமோ என சிலர் பேசிக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்