ஆளில்லா விண்கலம் அனுப்பிம் திட்டம் திடீர் ஒத்திவைப்பு: இஸ்ரோ தலைவர் சிவன்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (07:08 IST)
ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக  இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கொரோனா மற்றும் நிதி பிரச்னை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருந்தார். இந்த திட்டத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம் மட்டுமல்ல என்றும், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து அங்கு தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை சாத்தியமாக்கும் முயற்சியும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.
 
இந்த ககன்யான் திட்டத்தில் 2 முறை ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும், ஜூன் மாதம் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த திட்டம் தற்போது ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சந்திராயன்-3 திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது என்பதும், நிலவின் தெற்கு பகுதியை ஆராயும் இந்த திட்டத்திற்கு ரூ.600 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பதும், இந்த திட்டமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்