காளகஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (13:13 IST)
காளகஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா:
கொரோனா வைரஸ் ஜாதி, மத, இன வேறுபாடின்றி பாமரர் முதல் பணக்காரர் வரை பரவி வருவது அறிந்ததே இந்த நிலையில் காளகஸ்தி கோவில் அர்ச்சகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவிலேயே மிக முக்கிய கோவில்களில் ஒன்று காளஹஸ்தி சிவன் கோயில். இந்த கோயில் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்றுதா பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டது.
 
இந்த நிலையில் காளகஸ்தி கோவிலில் அர்ச்சகர் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்திக மற்ற அர்ச்சகர்களுக்கும் பக்தர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோவில் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்