லண்டன் பல்கலைக்கழக பேராசிரியை இந்தியாவில் இருந்து நாடு கடத்தல்! என்ன காரணம்?

Mahendran

புதன், 22 அக்டோபர் 2025 (10:44 IST)
லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புகள் பள்ளியின் புகழ்பெற்ற இந்தி மொழி பேராசிரியர் ஃபிரான்செஸ்கா ஆர்சினி, விசா விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
 
ஆர்சினி ஒரு சுற்றுலா விசா வைத்திருந்தும், அதன் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டதால், மார்ச் 2025 முதலே அவர் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. விசா நிபந்தனைகளை மீறுபவர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது ஒரு நிலையான உலகளாவிய நடைமுறை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
 
இந்திய இலக்கியத்தின் சிறந்த அறிஞரான ஆர்சினி, "தி ஹிந்தி பப்ளிக் ஸ்பியர்" உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவர் நாடு கடத்தப்பட்டதற்கு வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா போன்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்
 
Edietd by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்