இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளரான வெர்னோன் கோசல்வேஸ் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். அதுசம்மந்தமான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கோசல்வேஸின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை அவரது வீட்டில் ராஜ்ய தமன் விரோதி என்ற புத்தகம், டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்ற புத்தகம் மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்பான சில புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘போரும் அமைதியும் புத்தகம் ரஷ்யாவில் நடந்த போரைப் பற்றிய புத்தகம். அதை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள். இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் புத்தகம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற புத்தகம் என்பதும், டால்ஸ்டாய் காந்தியின் விருப்பத்த்குக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.