சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை, ராயப்பேட்டையில் தனது மூன்று மகள்களோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதயன் என்பவரோடு நட்பு ஏற்பட்டு காலப்போக்கில் அது இருவரும் சேர்ந்து வாழும் அளவுக்கு வந்துள்ளது.
இந்த கொலைகள் சம்மந்தமாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 377-ன் கீழ் உதயன்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மூன்று வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நேற்று தீர்ப்பளித்தார். அதில் கொலை செய்த உதயனுக்கு 4 ஆயுள்தண்டனைகளும் 20 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.