வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் நேற்று நீதிமன்றத்தில் நடிகர் விஹால் ஆஜரானார். விஷால் அலுவலகத்தில் வேலைப்பார்ப்பவர்களின் டிடிஎஸ் பணப்பிடித்தம் முறையாக அரசிடம் செலுத்தப்படவில்லை என்ற அவர்மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீண்டகாலமாக ஆஜராகாமல் இழுத்தடித்த விஷாலுக்கு எதிராகப் பிடிவாரண்ட் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளிக்கத் தொடங்கிய விஷால் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது இடைமறித்த நீதிபதி ‘உங்களுக்குத் தமிழ் தெரிந்தால்., நீங்கள் தமிழிலேயே பதிலளிக்கலாம்’ எனக் கூறினார். இதையடுத்து விஷால் தனது தரப்பு விளக்கத்தை தமிழில் அளித்தார். இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.