8 நகரங்களில் வெளியானது Jio Air Fiber; ரீசார்ஜ் ப்ளான் விவரங்கள்!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (15:39 IST)
ஜியோ ஏர் ஃபைபர் இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் 8 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.



இந்தியா முழுவதும் வேகமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதற்கேற்ப வேகமாக அப்டேட் ஆகி வருகின்றன.

முன்னதாக ஸ்மார்ட்போன் இணைய சேவையை அடுத்து ஃபைபர் கேபிள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பல முக்கிய நகரங்களிலும் ஃபைபர் சேவை இருந்தாலும், கிராமங்கள் பலவற்றை ஃபைபரால் அடைய முடியவில்லை.



இந்நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் தனது புதிய ஏர் ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏர் ஃபைபருக்கு வயர்கள் தேவை இல்லை என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும். தற்போது சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, புனே, டெல்லி ஆகிய 8 நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Jio AirFiber மற்றும் Jio AirFiber Max ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் 9 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் மாதம் ரூ.399 ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.3999 வரை 6 ரீசார்ஜ் ப்ளான்கள் உள்ளன. இந்த ப்ளான்களில் 550+ டிவி சேனல்கள், நெட்ப்ளிக்ஸ், ப்ரைம், ஜியோ சினிமா உள்ளிட்ட 14 ஓடிடி தளங்களும் வழங்கப்படுகிறது.



12 மாத மொத்த ரீசார்ஜ் ப்ளான்களுக்கு கிரெடிட்/டெபிட் கார்டு வசதி, EMI வசதி ஆகியவையும் உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்