ஜார்கண்டில் பாஜகவுக்கு தோல்வி, ஆனால் காங்கிரசுக்கு வெற்றியா?

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (07:10 IST)
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வெற்றியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விட காங்கிரஸார் மீது சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் காங்கிரசுக்கு சரியானதுதானா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 30 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இரண்டாவதாக பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் இம்மாநிலத்தில் வெறும் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது போல் கொண்டாடி வருவது சரிதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஜார்கண்ட் முக்தி மோட்சா உடன் கூட்டணியில் இணைந்தால் தான் இந்த 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
3 கட்சி கூட்டணியுடன் இணைந்து 47 தொகுதிகள் கைப்பற்றி விட்டு தனித்து நின்று வெற்றி பெற்று, தனித்து நின்று 25 தொகுதிகளில் வென்ற பாஜகவை கேலி செய்வது சரிதானா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது 
 
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து வருவதாக கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பாஜக இழந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்