ஜே.சி.பி – ஜீப் மோதல்…நொடியில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ

திங்கள், 27 ஜூலை 2020 (16:50 IST)
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு –பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நபர் தனது டூவீலரை நிறுத்திவைத்து செல்போனில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஜே.சிபியும், பொலிரோ ஜீப்பும் நேருக்கு நேர் அவர் மோதுவது போல் அவரருகில் வந்தது.

பொலிரோ வாகன ஓட்டி தனது கட்டுப்பாட்டில் வாகனத்தைக் கொண்டு வந்து ஜே.சிபியின் மோது மோதாமல் இருக்க ஜீப்பை ஒடித்து வளைக்கும்போது, அங்கே இரு சக்கரவாகனத்தை விட்டு ஓட முயன்ற நபர் மீது மோதியது.

நல்ல வேளையாக அவர் உயிருக்கு பாதிப்பு இல்லை. அதிர்ஷ்டவசமாக  அவர் இந்த இரு வாகனங்களில் இருந்து தப்பித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்