கர்நாடக மாநிலத்தில், முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த மா நிலத்தில், 6.41 கோடி மக்கள் தொகையுள்ள நிலையில், பட்டியலித்தவர்கள், மற்றும் பழங்குடியினத்தவருக்கான இட ஒதுக்கீடு உயர்த்த மா நில அரசு முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து, பாமக முன்னாள் தலைவரும் மருத்துவருமான ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும்!
இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது! பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இட ஒதுக்கீட்டையும் 56% ஆக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டிலும் அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.