இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் சரன் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் பேசுவதற்காக சென்றார். அவர் மேடையேறிய நிலையில் அங்குள்ள உள்ளூர் ஆட்கள் அவருக்கு மாலை அணிவிக்க மேடையில் ஏறியதால் அமளி ஏற்பட்டது. மேலும் சின்ன மேடையில் பலரும் ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.