இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரிக்கவும் முன்னதாக வாகனங்களுக்கான டயர்கள், டிவி செட், அகர்பத்தி போன்றவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏர்கண்டிஷனர்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏசிக்களை உள்நாட்டில் இறக்குமதி செய்து விற்பது அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் ஏசி விற்பனைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை சந்தை மதிப்பு உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசிக்களில் 90% ஏ.சிக்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு ஏ.சிக்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை சீனாவை வணிக ரீதியாக பாதிக்கும் என்பதோடு, உள்நாட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.