ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

J.Durai

வியாழன், 16 மே 2024 (20:51 IST)
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மணவெளி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில், அருகே உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் அக்னி மாரியம்மன், பூங்காவனத்தம்மன் ஆகிய கோவில்களின் உண்டியல் மற்றும் சொக்கன் கொல்லை கிராமத்தில் வள்ளலார் கோவில்கள் என நான்கு கோவில்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல்களில் இருந்த பல ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் நகை பொருட்கள் திருட்டு நடைபெற்றுள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இரண்டு தினங்களுக்கு முன்பு புவனகிரி அருகே திருப்பணி நத்தம் கிராமத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவில்களை குறி வைத்து நடைபெற்றுள்ள திருட்டுச் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனகிரி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்