கடந்த சில வாரங்களாக வடக்கு பீகார் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பரிசோதித்தபோது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் இந்த குறைப்பாடானது பீகாரில் உள்ள அதிகமான குழந்தைகளுக்கு உள்ளது. இந்த பாதிப்பினால் கடந்த 48 மணி நேரத்தில் 36க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.