காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தள்ளிப்போக வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:34 IST)
காங்கிரஸ் கட்சியில் செயற்குழு கூட்டம் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
 

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.

அப்போது பதவியை விட்டு விலகிய ராகுலை மீண்டும் தலைவராக வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில்  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிருப்தியில் இருந்த 23 பேர் கீழ் மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வரை தேர்தல்   நடத்தும்படி ஒரு கடிதம் எழுதினர்.

 கீழ்மட்ட தேர்தல் முடிந்த நிலையில், அடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடக்கவுள்ளதாக கட்சி தலைமை அறிவித்திருந்ததது.

ஆனால், இந்த ஆண்டு உதய்பூரில் நடந்த 'சிந்தனை கூட்டத்தில்' கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை செப்டம்பர் மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நேரம் நெருங்கிவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேடும் பணி முடிந்ததாக தெரியவில்லை.

இதற்கிடையே ஜி23 (23 மூத்த தலைவர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக் குழு) மெதுவாக சிதைந்து வருவதாகத் தெரிகிறது. இந்த குழுவைச் சேர்ந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.

ஆனந்த் சர்மா மற்றும் குலாம் நபி ஆசாத்தின் அதிருப்தியுடன் இருந்த நிலையில், சமீபத்தில் காஷ்மீர் தேர்தல் பரப்புரைக் குழு , அரசியல் விவகாரங்கள் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த குலாம், அப்பதவியை ஏற்கவில்லை. இந்த நிலையில், கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆஷாத், இன்று அறிவித்துள்ளார்.
 
இது அக்கட்சியினர் இடையயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் இந்த நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் காரணமாகவும்,  வரும் செப்டம்பர் 7 ஆம் தெதி கன்னியாகுமரியில்  ராகுல் காந்தி எம்பி தலைமையில் நாடு தழுவிய பாத யாத்திரை தொடங்கப்பட்டு, காஷ்மீரீல் முடியவுள்ள நிலையில்,  கட்சித் தலைவர் தேர்தல் நடத்த தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

ஒருவேளை ராகுல் போட்டியிட்டால் அவர் தேர்வாகலாம், அவரை சம்மதிக்கவைக்க  ராஜஸ்தான் முதல்வர் அகோக்கெலாட் முயற்சித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்