நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ்: பிரதமர் மோடி

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (09:35 IST)
நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளுக்கு சிவப்பு நோட்டீஸ் அறிவிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என இன்டர்போல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தியாவில் பொருளாதார குற்றம் செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு தப்பி ஓடி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று இன்டர்போல் 90வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இது குறித்து பேசினார். நாட்டைவிட்டு தப்பி ஓடும் குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ்கள் அறிவிக்கும் நடவடிக்கைகளை இன்டர்போல் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
 
மேலும் உலக நாடுகள் ஒத்துழைத்து செயல்பட்டு தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்