ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் அல்லாமல் செங்கல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:29 IST)
பெங்களூருவில் ஆன்லைன் மூலம் கேமரா ஆர்டர் செய்த நபர் ஒருவருக்கு கேமராவுக்கு பதில் செங்கல், பார்சலில் வந்துள்ளது


 

 
பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(26), தனியார் கணினி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
 
இதையடுத்து, அவருக்கு அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பார்சல் அனுப்பியுள்ளது. அதில் கேமராவுக்கு பதில் செங்கல் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சித், பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அந்த ஆன்லைன் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
 
இதனால் ரஞ்சித் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார். அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்