உலகின் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்தப்பட்ட இளம்பெண்

செவ்வாய், 5 ஜூன் 2018 (13:39 IST)
பிரேசில் நாட்டில் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்த பெண் ஒருவருக்கு அவரது 23வது வயதில் செயற்கை பெண்ணுறுப்பு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது உடலுறவுக்கு தகுந்த பெண்ணாக மாறியுள்ளார்.
 
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூசிலொஇன் மரினோ என்ற பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். அபூர்வமாக இதுபோன்ற குறை ஏற்படும் நிலையில் இந்த பெண்ணுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை பெண்ணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
 
இதற்காக மீன்களின் தோலினால் ஆன செயற்கை பெண்ணுறுப்பை செய்து அவரது உடலில் பொருத்தினர். இந்த அறுவை சிகிச்சை முடிந்த மூன்று வாரத்திற்கு பின்னர் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டதாகவும், இந்த அனுபவம் தனக்கு புதுமையாக இருந்ததாகவும் அவர் பேட்டியளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்