65 விமானங்கள் ரத்து: பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ்...

செவ்வாய், 13 மார்ச் 2018 (16:11 IST)
நடுவானில் பறக்கும்போது அடிக்கடி என்ஜின்கள் செயலிழப்பதால், A320 நியோ ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 65 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது. 
 
மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி நேற்று காலை 186 பயணிகளுடன் சென்ற இண்டிகோவின் A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் இரண்டாவது என்ஜின் திடீரென்று செயலிழந்தது. இதையடுத்து விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
எனவே, இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த A320 நியோ வகை விமானங்கள் இயந்திர பழுது காரணமாக ரத்து செய்யப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறிவித்தது. 
 
இதையடுத்து இண்டிகோ நிறுவனத்தின் 47 விமானங்களும், கோ ஏர் நிறுவனத்தின் 18 விமானங்களும் ரத்தாவதாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்தி போன்ற நகரங்களிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்தாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்