அமெரிக்காவை அடியோடு புரட்டிய பனிப்புயல். 7000 விமானங்கள் ரத்து

வெள்ளி, 17 மார்ச் 2017 (01:03 IST)
அமெரிக்கா, கனடா நாடுகளை அடிக்கடி பனிப்புயல் மிரட்டி வரும் நிலையில் வாஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த திங்கள் முதல் நேற்று வரை வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்கவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




பனிப்புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் 30 முதல் 50 கிமீ வேகத்தில் பனிப்புயல் வீசியதாகவும், மில்லியன் கணக்கான பொதுமக்கள் 25 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருசில இடங்களில் மைனஸ் 2 முதல் மைனஸ் 8 டிகிரி வரை குளிர் அடித்ததாக கூறப்படுகிறது.

7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுமார் 220,000 கடைகள், வீடுகளில் மின்சாரம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புயல் பாதித்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரெம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்