நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய புயல்.. புயலுக்கு பெயர் வைத்த ஓமன் நாடு..!

Mahendran
வியாழன், 23 மே 2024 (13:34 IST)
நாளை மறுநாள் வங்கக்கடலில் புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்த நிலையில் இந்த புயலுக்கு என்ன பெயர் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
 
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நாளை அல்லது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் அதனை அடுத்து புயலாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் வங்க கடலில் புயல் உருவாகிறது என்றும் இந்த புயலுக்கு ரீமால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் ஓமன் நாடு பரிந்துரைப்படி இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் மேற்குவங்க பகுதியில் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கு வங்கம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப்பணிகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
அதேபோல் இந்த புயல் வங்கதேசத்துக்கு மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வங்கதேச நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை  வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்