எலிசபெத் மகாராணி மறைவு; இந்தியாவில் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:08 IST)
இங்கிலாந்து மகாராணி மறைவை தொடர்ந்து அவரது மறைவுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகாராணியின் மறைவால் இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் மகாராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 11ம் தேதியன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது. அனைத்து பகுதிகளிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்