70 ஆண்டு காலம் மகாராணியாக விளங்கிய இரண்டாம் எலிசபெத் இதுவரை மூன்று முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். முதன்முறையாக ராணி எலிசபெத் இந்தியா சுதந்திரமடைந்து 17 ஆண்டுகள் கழித்து 1961ல் இந்தியா வந்தார். எலிசபெத்தின் தாத்தாவான அரசர் ஜார் மற்றும் ராணி மேரி 1911ல் இந்தியாவிற்கு தங்கள் முதல் பயணத்தை தொடர்ந்தனர்.
அதை தொடர்ந்து 50 ஆண்டுகள் கழித்து ராணி எலிசபெத்தின் இந்த பயணம் நடந்தது. 1961ல் பிரதமராக இருந்த நேரு மற்றும் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் இந்தியா வந்த ராணி எலிசபெத், இந்தியாவின் சுதந்திர தின விழாவிலும் கலந்து கொண்டார்.
தனது முதல் பயணத்தின் போது ஆக்ரா, தாஜ்மஹால், ஜெய்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டாம் எலிசபெத் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1983ல் இந்தியா வந்த எலிசபெத் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியை சந்தித்தார். பின்னர் பஞ்சாபின் தங்க கோவிலுக்கு பயணம் செய்தார்.