ஆப்கனிலிருந்து திரும்பிய இந்தியர்கள் ‘வந்தே மாதரம்’ என கோஷமிட்டு மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:39 IST)
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர் என்பதும் அவர்களை அழைத்துவர இந்திய விமானப்படையை அனுப்பி உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆப்கன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் வந்தேமாதரம் என கோஷமிட்டு மகிழ்ச்சி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் அச்சத்துடனே வாழ்ந்த அவர்கள் தற்போது சுதந்திரக்காற்றை சுவாசித்து வருகிறார்கள் என்பது அவர்களுடைய கோஷத்தில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்து பேட்டியளித்த பலர் இனி தாய்நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்றும் குறிப்பாக ஆப்கன் நாட்டின் பக்கம் தலை வைத்து கூட பார்க்க மாட்டோம் என்றும் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் அருமை இந்தியாவை விட்டு வெளியே சென்ற பிறகுதான் தெரியும் என்று முன்னோர்கள் கூறியது தற்போது உறுதியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்