ஒரு நாளைக்கு 80 கொலைகள், 91 பலாத்கார குற்றங்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (09:30 IST)
கடந்த 2018ம் ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 80 கொலைகள், 91 பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த கொலை மற்றும் பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்கள் குறித்த புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டு முழுவதும் மொத்தமாக 29 ஆயிரம் கொலை வழக்குகளும், 33 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகி இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு ஒப்பிடும்போது 2018ம் ஆண்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தோராயமாக ஒரு நாளைக்கு 80 கொலைகள், 91 பலாத்கார குற்றங்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவைத்தவிர மொத்தமாக 50 லட்சத்து 74 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்