3 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்: அருணாச்சல பிரதேசத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (06:03 IST)
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு மோசமான வானிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
இதுகுறித்து அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டரில் கூறியபோது, '‘வடகிழக்கு மாநிலங்களில் மோசமான வானிலை உள்ளது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் காணாமல்போன விமானப்படை விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது’ என கூறியுள்ளார்
 
காணாமல் போன ஹெலிகாப்டர் அருணாச்சலபிரதேச மாநிலத்தின் பாபம் பரே மாவட்டம் சாகலி அருகே சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர்களோடு அந்த பகுதி பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்